உத்தரகாண்ட்  இயற்கை பேரிடர் – ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா மின்திட்டம் 

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

 

நேற்று (ஞாயிறு) காலை, சமொலி மாவட்டத்தின் ரெனி எனும் கிராமத்தில், நந்தா தேவி பனிப்பாறையில் திடீர் பனிச் சரிவு ஏற்பட்டது.

இதனால் தெளலிகங்கா மற்றும் அலக்நந்தா ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு உண்டானது.

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) மற்றும் ரிஷி கங்கா மின் திட்டம் ஆகியவை வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

அங்கு பணியாற்றுக்கொண்டிருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது என்று இப்போது தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தின் கேதர்நாத் பகுதி ஒரு மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்தித்தது. இந்த விபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.

சுமார் நான்காயிரம் கிராமங்களை பாதித்த இந்த வெள்ளத்தால், பல மலை கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.