ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்?

IMG 20240327 WA0026 ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்?2019 ஏப்ரல் 21 அன்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள் 269 பேரின் உயிர்களை காவு கொள்ள காரணமான ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம் எம் மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று புதன் கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவரால் மேற்படி கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

“கடந்த காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினை பெரும்பான்மை மக்களினதும் நாட்டினதும் எதிரிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற திட்டமிட்டட செயற்பாடுகள் தொடராக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தன.

அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர சம்பவமே இந்த ஈஸ்டர் தாக்குதலாகும். இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்துவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு எந்த ஒரு தேவையும் இருக்கவில்லை.

இருந்தாலும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லீம் சமூகம் அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டதோடு உயிர்கள், பல கோடி சொத்துக்கள் என பாரிய அழிவுகளுக்கும் முகம் கொடுத்தனர்.

எனவே பிரதான சூத்திரதாரியை தனக்கு தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறுவதன் அடிப்படையில் துரிதமாக விசாரணையை நடாத்தி உண்மையான சூத்திர தாரியை நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவதோடு உரிய தண்டனையை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.