ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சி – விமல் வீவரவன்ஸ

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் காப்பாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மறைக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது” என்றார்.