இலங்கை விவகாரம்- பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான Siobhain, McDonagh,Elliot Colburn மற்றும் Edward Davey ஆகியோர் விவாதத்தை கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.