இலங்கை நிலை தொடர்பாக ஐ.நா. அதிகாரி கவலை

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தாம் கவலை கொண்டுள்ளதாக, ஐ.நா. சபை மனித உரிமைகள் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. சபையின் 41ஆவது அமர்வு இன்று (23) ஜெனீவாவில் ஆரம்பமானது. இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இலங்கை தொடர்பான இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான ஒற்றுமையில்லா தன்மை நாட்டு மக்களின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், முஸ்லிம்களின் மீதான தாக்குதல், மதத் தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் கவலையளிப்பதாகவும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் என்றும்  தனது உரையில் தெரிவித்தார்.