இலங்கையில் நீதித்துறை கபளீகரம் செய்யப்பட வாய்ப்பு -மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை

இலங்கையில் அரசியல் பழிவாங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தீர்மாணங்கள் வருகிற ஏப்ரல் 9ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொலை முயற்சி, பண மோசடி, பாதுகாப்பு துறையில் கடுமையான குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள்  மீண்டும் பணியமர்த்தும் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளை காப்பாற்ற இந்த ஆணையத்தின் தீர்மானங்கள் வழிவகை செய்கிறது.

இலங்கையில் ஏற்கனவே கோட்டபயா ஆட்சியில் நசுக்கப்பட்டு உள்ள நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என Human rights watch தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசுகையில் தெற்காசிய Human Rights Watchன் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி ,  “ராஜபக்சா தன்னையும் தனது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்றுவதற்காக இலங்கையின் நீதித்துறை கபலிகரம் செய்துள்ளார்“ என கூறியுள்ளார்.

இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்களை பார் அசோசியேஷன், டிசம்பர் மாதம் அதிபர் முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆணையத்தின் தீர்மானங்கள் நடைமுறைக்கு வரும் ஆனால் இலங்கையில் நீதித்துறை நெருக்கடிக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் தனது வேலை திட்டத்தை தாண்டி ஜனாதிபதி ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசாரித்து வருகிறது.

மேலும் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது உள்ள  ஊழல் வழக்குகள் திரிக்கப்பட்டது என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த சட்டம் தீர்மானம் தெரிவிக்கின்றது. இது மட்டுமின்றி மிக் போர் விமானம் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கில் இருந்தும் இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க கோருகிறது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றால், 2008 முதல் 2012 காலம் வரை ஊடகவியலாளர் Keith Noyahr கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊடகவிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்குகள், 2012ம் ஆண்டு நடைபெற்ற வெளிக்கடை சிறை படுகொலை வழக்கிலும் அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயா ராஜபக்சாவிற்கு எதிராக சமர்பிக்கப்பட்ட சாட்சியங்கள் புனையப்பட்டது என கூறி அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே விசாரணைகளில் உள்ள அரசியல் தலையீட்டின் காரணமாக வழக்கு விசாரணை காலம் தாழ்த்த படுகிறது என Human Rights Watch தெரிவித்துள்ளது. இது போன்று கடும் குற்றங்களுக்கு பொறுப்பேற்கும் காலம் தாழ்த்தும் நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் சர்வதேச விசாரணைக்கு உதவும் வகையில் UN Office of the High Commissioner for Human Rights வழக்குகளை விசாரித்து தேவையான சாட்சியங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைக்குரிய குற்றங்கள் வளர்ப்பதற்கு பதிலாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டத்தின் கீழ் தனது கடமைகளை உறுதிப்படுத்த வேண்டும். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஐ.நா.வுடன் ஒத்துழைக்க வேண்டும், இது மனித உரிமைகள் மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும், பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கும் ஒரு சுயாதீனமான நெறி முறையை உருவாக்குகிறது என  Human Rights Watch தெரிவிக்கின்றது.