இலங்கைப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை

இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கு நுழைவு அனுமதி வழங்குவதற்காக பணம் அல்லது எந்தவொரு நிதிக் கட்டணத்தையும் கோரும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பயணிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிவித்தலில்,

சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களைத் தவிர இலங்கைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மேலதிக மற்றும் உண்மைத் தகவல்களுக்கு தமக்கு அருகிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது இலங்கையின் இணையத்தளத்தில் https://www.contactsrilanka.mfa.gov.lk தொடர்பு கொள்ளலாம்” என்றுள்ளது.