இலங்கைக்கு ரூ. 2 பில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்கள் சீனாவால் அன்பளிப்பு

இலங்கைக்கு மக்களுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 2 பில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றம் மருத்துவ பொருட்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

நேற்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இத்தொகுதியானது, 255 மெட்ரிக் தொன் நிறை கொண்ட, 24 கொள்கலன்களில், 16,000 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு வந்தடைந்ததாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் முதல் ரூ. 5 பில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு சீனா அன்பளிப்பு செய்துள்ளதாக, தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் உள்ளடங்கும் மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வருமாறு:

8 மில்லியன் Infusion Sets

1.2 மில்லியன் vials of Omeprazole Sodium for Injection,

1 மில்லியன் Capecitabine Tablets,

612,720 PF. Syrs of Enoxaparin Sodium Injection,

240,000 bottles of Sodium Valproate Tablets,

100,800 ampoules of Heparin Sodium Injection