இம்ரான்கானுக்கு பிணை வழங்கிய நீதி மன்றம்

இலங்கையை போல பூகோள நெருக்கடியில் சிக்கி பதவியிழந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் ரிக்றீக் ஈ இன்சாப் (பி.ரி.ஐ) கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு பாகிஸ்தானில் உள்ள இரு நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளன.

பயங்கரவாத தடுப்புச்சட்டம், சட்டவிரோதமாக மக்களை ஒன்று திரட்டியமை ஆகிய வழக்குகளில் இருந்தே பிணை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி மற்றும் பெண் நீதியாளர் ஆகியோரை மிரட்டியமை தொடர்பில் தான் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக இம்ரான்கான் மீது அதிகப்படியான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. தன்னை அரசியலில் இருந்து ஒரங்கட்டும் பணிகளை தற்போதைய அரசு செய்துவருவதாகவும், இது பாகிஸ்தானில் சட்ட ஒழுங்கு இல்லை என்ற தோற்றப்பாட்டை உலகில் ஏற்படுத்தும் எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் நாம் மிகப்பெரும் பேரணியை நடத்தியுள்ளதே தற்போதைய ஆட்சியாளர்களை அச்சமடைய வைத்துள்ளது. எமக்கு எதிராக இயங்குபவர்கள் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்.