இந்தோனேசியாவில் காணாமல் போன அகதிகள் மலேசியாவுக்கு கடத்தலா?

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் அமைந்துள்ள தற்காலிக முகாமிலிருந்த சுமார் 300 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் காணாமல் போன நிலையில், அவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்பட்டிருக்கூடும் என்ற சந்தேகம் இரு நாட்டு பாதுகாப்பு மட்டத்தில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தோனேசியவில் தஞ்சமடைந்திருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் Lhokseumawe தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதில் தற்போது வெறும் 112 அகதிகளே எஞ்சியுள்ளனர்.
இந்நிலையில், ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் வெளியேறுவது ஆபத்தானது என எங்களது தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை மீறி ரோஹிங்கியா அகதிகள் வெளியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையாளரின் பேச்சாளர் Mirta Suryono கூறியுள்ளார்.