இந்திய-சீன இராணுவத்துக்கு இடையே மோதல்- பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என ஐ.நா நம்பிக்கை

இந்திய-சீன இராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio Guterres )நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்திலும் சீன இராணுவம் கடந்த வாரம் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  அங்குள்ள நாது லா எல்லை பகுதி வழியாக  உள்நுழைந்த சீன இராணுவத்தினரை  இந்திய இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து  உள்ளூர் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில், இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸின் கருத்து தொடர்பில்,   அவருடைய செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக்கிடம்  ஊடகங்களுக்கு  கூறுகையில், “ எல்லைப் பகுதியில் நிலவ வாய்ப்புள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தணிக்க முடியும் என்று நாங்கள்நம்புகிறோம். இதுதான் நாங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்து” என்று கூறியுள்ளார்.