இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாம்: பாஜக மூத்த தலைவர் விஜய்வர்க்கியா தகவல்

மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டியில், “ மேற்கு வங்க மாநில மக்களை முட்டாளக்க பாஜக  முயற்சித்து வருகிறது. குடியுரிமை என்றால் என்ன என பாஜக  நினைக்கிறது. மத்துவா சமூகத்தினர் குடியுரிமை பெறாவிட்டால் எவ்வாறு அவர்கள் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும். மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மத்துவா சமூகத்தினர் கிழக்கு பாகிஸ்தான் தற்போது வங்கதேசத்திலிருந்து கடந்த 1950-களில் புலம்பெயர்ந்து வந்தவர்கள். பெரும்பாலும் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் அங்கிருந்து மேற்கு வங்கத்தில் புலம் பெயர்ந்தனர்.

மேற்கு வங்கத்தில் மத்துவா சமூகத்தினர் ஏறக்குறைய 30 லட்சம் பேர் இருக்கின்றனர். குறிப்பாக நாடியா, வடக்கு, தெற்கு பர்கானா மாவட்டங்களில் 30 முதல் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்துவா சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.