இந்தியாவுக்கு ஆதரவாக கனடாவுக்கு எதிராக களமிறங்கிய இலங்கை

கனடாவில் உள்ள சீக்கிய ஆலயத்தில் அதன் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் என்பவரை இந்தியாவின் புலனாய்வுத்துறை சுட்டுக்கொன்றதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ குற்றம் சுமத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் இரஜதந்திர மோதல்களில் இலங்கை இந்தியாவை ஆதரிப்பதாக  தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு எதிரான இந்தியாவின் வாம் காத்திரமானதும், உறுதியானதும், இலங்கை இந்த விவகாரத்தில் இந்தியாவின் பக்கமே நிற்கும் என இந்தியாவில் இருந்து தனது தூதரகப்பணிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கனடா பயங்கரவாத்திற்கு ஆதரவளிக்கும் நாடு எனவும், இந்தியாவின் நிலைப்பாடே சரியானது எனவே இலங்கை இந்த விவகாரத்தில் இந்தியாவின் பக்கமே நிற்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். இலங்கை மீது கனடா குற்றம் சுமத்துவதைபோல இந்தியா மீதும் ரூடோ ஆதாரங்களின்றி குற்றம் சுமத்துவதாக சப்ரி கனடாவை சாடியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் நடுநிலமையை கடைப்பிடிக்கவே இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா விரும்பியிருந்தார். எனினும் சப்ரியின் கருத்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பல கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.