இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டறிவு

இந்தியாவில் சேகரிப்பட்ட மாதிரிகளில் புதிய ‘இரட்டை பிறழ்’ திரிபு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் மரபணு குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், இந்தியாவில் ‘இரட்டை பிறழ்வு கொண்ட கொரோனா வைரஸ் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இரண்டு பிறழ்வுகள் ஒன்றாக இணைந்து வந்துள்ள இந்த திரிபு மிகவும் பயங்கரமானதா, தடுப்பு மருந்துகளால் பாதிப்பு குறைவாக உள்ளவையாக இருக்கக்கூடியதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்ததைவிட E484Q மற்றும் L452R ஆகிய பிறழ்வுகளின் அளவு அதிகமாக உள்ளதாக அரசு தெரித்துள்ளது.

”இத்தகைய (இரட்டை) பிறழ்வுகள், நமது நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிப்பதோடு, நோயின் பாதிப்பையும் அதிகரிக்கும்.” என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த E484Q பிறழ்வு என்பது, தென் ஆஃப்ரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.351இல் இருந்த மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட P.1இல் இருந்த E484K பிறவை ஒத்ததாகவே உள்ளது என்கிறார், லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் ஹெலித் சைன்ஸ் செண்டர் ஷ்ரெவேபோர்டில் பணியாற்றும் டாக்டர் ஜெரமி கமில்.

ஒரே வைரஸின் குடும்பத்தில் இத்தகைய பிறழ்வுகள் நடக்க ஆரம்பித்தால், அந்த வைரஸின் செயல்பாடு மாறவும், அதன் பரம்பரை ‘கவலையளிக்கக்கூடிய பிறழ்வுகள்’ வகையில் வரலாம் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘இரட்டை பிறவில்’ இடம்பெற்றுள்ள L452R பிறவைப் பொருத்த வரையில், B.1.427/B.1.429 வைரஸ் வகைப்பரம்பாரையில் அமெரிக்காவில் இருந்தது என்பதனால் கவனம் பெற்றது. இதை “கலிபோர்னியா திரிபு” என்றார்கள் என்கிறார் மருத்துவர் கமில்.

இந்நிலையில், இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 62,258 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,08,910ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 291பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,61,240 ஆக அதிகரிதுள்ளது.

மேலும் இந்தியாவில் இதுவரை 5,81,09,773பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.