இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு – மத்திய, மாநில அரசுகள் மீது சர்வதேச நீதிபதிகள் குற்றச்சாட்டு

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலைக்குத் தயாராவதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச நீதிபதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3498 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,08,330 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளே காரணம் என விமர்சித்து சர்வதேச நீதிபதிகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “ கொரோனாவால் இந்திய மக்கள் தவித்து வருகின்றனர். மிக அதிகளவான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்திய அரசு கொரோனாவை உடனடியாக கட்டுப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் எளிதாக கணிக்க கூடிய வகையில் இருந்த, கொரோனா இரண்டாவது அலையைப் பற்றிக் கவனத்தில் கொள்ளாமல், முன் தயாரிப்புகள் ஏதுமின்றி இருந்ததுதான் இந்தியாவில் கொரோனா இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.