இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 2

2. புதுக்காட்டுச் சந்திப்படுகொலை 11 அக்டோபர் 1987

கிளிநொச்சி மாவட்டத்தின் வடபகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஏ 9 நெடுஞ்சாலையில் சோரன்பற்று புதுக்காட்டுச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியானது மருதங்கேணி,பளைää கிளிநொச்சி என்பவற்றை இணைக்கும் முச்சந்தியாக உள்ளது. இச்சந்தியைச் சுற்றி சோரன்பற்று, கரந்தாய் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும் தாளையடி, மருதங்கேணிப் பகுதிக்கான பிரதான வீதி இச்சந்தியிலிருந்து ஆரம்பிப்பதால் இச்சந்தியில் போக்குவரத்துக்காகப் பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற இடமாகும்.gg இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 2

11.10.1987 அன்று ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் ஆனையிறவு இந்திய இராணுவ முகாமிலிருந்து யாழ். நோக்கி வாகனத்தொடரணி, கவசவாகனங்கள் சகிதம் வந்த இந்தியப் படையினர் புதுக்காட்டுச் சந்திப் பகுதியில் திடீரென வாகனங்களிலிருந்து இறங்கி அப்பகுதியில் கடைகளில் பொருட்களை வாங்குவதற்காகவும், பிரயாணத்திற்காகவும் நின்ற பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் உயிரிழந்ததுடன், நான்குபேர் படுகாயமடைந்தார்கள.; இந்தச் சம்ப்பவத்த்தின் போது தன்னுடைய இரண்டு பிள்ளைகளை இழந்தவரும் சந்தியில் கடை வைத்திருந்தவருமான இளையதம்பி பேரம்பலம் பின்வருமாறு கூறினார்.ipkf 1 இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 2

“வாகனங்களில் வந்த இந்திய அரச படையினர் திடீரென இறங்கி பஸ்தரிப்பு நிலையத்திற் காத்து நின்ற மக்கள்மீதும் கடைகளில் நின்றவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினார்கள். அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகையால் கடையில் எனது மூத்தமகனும் இளையமகளும் நின்றனர். அத்துடன் ஊழியர் ஒருவரும் நின்றார். இவர்கள் மூவரையும் இராணுவம் கடையுடன் சேர்த்து எரித்தது. இவர்களின் உடல்கள் எரிந்த நிலையில் பின்னர் என்னால் மீட்கப்பட்டது. இந்தச் சந்தியிலிருந்த நான்கு கடைகளும் டாங்கிகளால இடிக்கப்பட்டன. அத்துடன் சந்தியில் நின்ற காரும் எரிக்கப்பட்டது.”

கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)

01. கனகரத்தினம், சாரதி,35
02. குழந்தைவேலு செல்வராசா, வியாபாரம் , 22
03. பொன்னையா நவரத்தினம்,காவலாளி, 34
04. பொன்னையா சுப்ரமணியம்,வியாபாரம்,40
05. பேரம்பலம் மகேஸ்வரன்,மாணவன், 10
06. பேரம்பலம் கோகிலாதேவி,மாணவி,14
07. வேலாயுதம் செந்தில்நாதன்,மாணவன், 14
08. சின்னத்தம்பி பசுபதிப்பிள்ளை,கமம், 41

காயமடைந்தவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் வயது)

01. கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன், 14
02. சுப்பிரமணியம் ஏகாம்பரம் 45
03. சின்னக்குட்டி சிவரூபன்,16
04. ஆறுமுகம் பாலசிங்கம், 30

பகுதி 3 தொடரும்…………….