ஆட்கடத்தலுக்கு வழி வகுக்கும் கொரோனா பெருந்தொற்று

வங்கதேச அகதிகள் முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவை நோக்கி கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வது வாடிக்கையான ஒன்றாக நிகழ்ந்து வருகின்றது.

ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் குறிவைப்பதைக் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள முகாம்கள் அமைந்திருக்கும் காக்ஸ் பஜார் பகுதி அருகே உள்ள Teknaf பகுதியின் கவுன்சிலர், “கொரோனா பெருந்தொற்று சூழலினால், மிகக் குறைந்த அளவிலான மீன்பிடி படகுகளே கடலுக்கு செல்கின்றன. இந்த நிலைமையைப் பயன்படுத்தி ஆட்கடத்தல்கார்கள் மக்களை கடத்துகின்றனர்,” எனக் கூறியிருக்கிறார்.

அதே நேரம் கடல் கொள்ளையர்கள் கையில் சிக்கிய ரோஹிங்கியா அகதிகளை வங்கதேச கடலோர காவல்படை மீட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி தத்தளித்து வந்த 30 ரோஹிங்கியா அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச அகதிகள் முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவை நோக்கி கடல் வழிப்பயணமாக முயற்சித்த போது, அவர்கள் சென்ற  படகு ஒன்று கடல் கொள்ளையர்களின் கையில் சிக்கியிருக்கின்றது.

“இப்படகினை கொள்ளையர்கள் தாக்கி அகதிகளிடமிருந்த விலை மதிப்பான பொருட்கள் அனைத்தையும் பறித்துச் சென்றது மட்டுமின்றி படகின் இயந்திரத்தையும் சேதப்படுத்தி சென்றிருக்கிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார் வங்கதேச கடலோர காவல்படையின் பேச்சாளர் அமிரூல் ஹக்கியூ.