இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் நினைவாக ‘முள்ளிவாய்க்கால் நினைவு இல்லம்’ அவுஸ்திரேலியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.
சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் ஆதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – சிட்னி’ அமைப்பின் ஏற்பாட்டில் சிட்னியில் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.





