அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறையை தடுக்க அரசு புதிய திட்டம்

புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் பூர்வீக குடிமக்கள் பிரிவுகளைச் சார்ந்த பெண்களை மையப்படுத்தி செயல்படும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்போவதாக  அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

வன்முறை உறவுகளில் இருந்து தப்பி ஓடும் பெண்களுக்கு $ 5,000 டொலர் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்த 5,000 டொலர் நிதி உதவி இரண்டு அம்சமாக பிரிக்கப்படுகிறது.

1,500 டொலர் நிதி உதவியாக ஒருவருக்கு தரப்படும்.

மேலும் 3,500 டொலர் நிதி வீட்டு வாடகை, சட்ட உதவிக்கான கட்டணம் மற்றும் வீட்டுபொருட்கள் வாங்குதல் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்த வழங்கப்படும்.

இந்த திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்படுவதால் பரிசோதனை திட்டமாக செயல்பட்டு இதன் வெற்றி பின்பு ஆய்வு செய்யப்படும்.