அவுஸ்திரேலியாவின் இறைச்சிக்கு சீனா தடை விதிப்பு

அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சிக்கு சீனா தற்காலிக தடைவிதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா மீது அனைத்துலக விசாரணைகள் தேவை என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அவுஸ்திரேலியா கடந்த மாதம் ஆதரவு அளித்திருந்ததுடன் தொடர்ந்து கோரிக்கையையும் விடுத்து வந்திருந்தது.

அதனை வன்மையாக கண்டித்த சீனா இரு நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது அவஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி வகைகள் தரமான முறையில் குறியிடப்படவில்லை என்ற காரணத்தை கூறி சீனா தடை செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மூன்றில் ஒரு ஏற்றுமதிப் பொருட்களை சீனாவே கொள்வனவு செய்கின்றது. எனவே தற்போதைய இந்த நடவடிக்கை அவுஸ்திரேலியா அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.