அலெக்ஸே நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்ய கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை எனில், அவர் ஓரிரு நாளில் இறக்கக் கூடும் என, அவரது மருத்துவக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து “நவால்னிக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை நியாயமற்றது, முற்றிலும் பொருத்தமற்றது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

அத்தோடு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன் சிஎன்என்-க்கு பேசும்போது, “நவால்னி இறந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். சர்வதேச சமூகம் ரஷ்யாவைப் பொறுப்பாக்கும்” என்று கூறினார்.

இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் அலெக்ஸே நவால்னியின் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.

ஆனால் ரஷ்யா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாகக் கூறும் பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர், “அவரை சிறையில் சாக விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

jail

மோசமான நிலைக்குப் பெயர்பெற்ற சிறையில் நவால்னி அடைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.