அரபுமயமாக்கல் ஆரம்பமானது ஹிஸ்புல்லாவின் பதவிக் காலத்திலேயே – அவுசாலி உவைஸ் சாட்சியம்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையில் சட்டசியமளித்த காத்தன்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர் அவுசாலி உவைஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘அரபுமயமாக்கல் என்பது இஸ்லாமிய கலாசார விழுமியமல்ல.அது ஏனைய மக்களை சவுதியரேபியாவில் இருந்து வெளியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். எனினும் அராபியமயமாக்கல் இங்கு முஸ்லீம் தீவிரவாத வளர்ச்சிக்கு பங்களித்திருக்காது’. என தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்ரமரெட்ன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதியளித்த உவைஸ் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் அரபுமொழியில் பெயர்ப்பலகைகள் எழுதப்பட்டுள்ளது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அது அவசியமற்றது என்றும் அரபு மொழியை கற்றுக்கொள்வது புனித குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கேயன்றி பெயர்ப்பலகைகளில் பயன்படுத்துவதற்கல்ல
என அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான சாலை பேரிச்சை மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அரபுமயப்படுத்தல் ஹிஸ்புல்லாவின் பதவிக்காலத்தில் நடந்தது என்றும் அவர் கூறினார்.