அமெரிக்க தேர்தலில் கமலா ஹரிசுடன் ஜோபிடன் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹரிசுடன் அதிபர் வேட்பாளரான ஜோபிடன் முதன்முறையாக சேர்ந்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு கரோலினாவில் உள்ள வில்மிங்டன் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் ஜனநாயகக் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கமலா ஹரிஸ் தனது கணவரான ஹரிசுடன் மேடையில் தோன்றினார். இதேபோல மனைவியுடன் வந்த ஜோபிடனுக்கும் அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் தங்கள் வரவேற்பை அளித்தனர்.

தமது பிரச்சாரத்தின் போது கொரோனா பிடியில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றி மேம்படுத்த இருவரும் உறுதி பூண்டுள்ளதாக கமலா கூறினார். அவரது பேச்சை அரங்கிலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மேலும் கமலா தெரிவிக்கையில், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் ஜோவும் நானும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். நீதிமன்றங்களில் நான் நியாயத்திற்காக வாதாடியதை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அதுபோல மக்கள் மன்றத்தில் ட்ரம்ப் மற்றும் மைக் பென்சுக்கு எதிராக நான் வைக்கும் வாதங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்விற்கான தேர்தலில் ஜோபிடனை எதிர்த்து கமலா போட்டியிட்டார். இறுதியில் போட்டியிலிருந்து கமலா விலகிவிட்டார். எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.