அமெரிக்கா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயார் – ஈரான்

அமெரிக்கா தம்மீது எவ்வகையான போரை தொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்துள்ளார்.

பக்தாத்தில் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வளைகுடா நாடுகளுடன் ஒத்துழைத்துப் போகவே ஈரான் விரும்புகிறது. ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிராக அந்நாடுகளுடன் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.

இராணுவ போரோ, பொருளாதாரப் போரோ எதுவாக இருந்தாலும் அதை ஈரான் எதிர்கொள்ளும். வளைகுடாப் போரில் எண்ணெய்க் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. அதன்பின்னரே இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நிலை நீடித்து வருகிறது.

ஈரான் மீது பொருளாதாரத்  தடைகளை விதித்தாலும் ஈராக்கிற்கு ஆதரவாகவே அமெரிக்கா செயற்படுகின்றது.