அமெரிக்கா தலைமையிலான கூட்டணி விமானத் தளம் மீது தாக்குதல்

ஈராக்கின் மேற்கு பகுதியில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விமானத் தளம் ஒன்று பத்து ஏவுகணை குண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அல் அசாத் விமானத் தளத்தின்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறிப்பிடத் தகுந்த சேதங்கள் எதுவும் நிகழவில்லை என்று ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடாத ஓர் ஒப்பந்த ஊழியர், இந்த தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியினால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என ஈராக் பாதுகாப்புத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள அன்பார் மாகாணத்தில், ‘இஸ்லாமிய அரசு’ என அழைக்கப்படும் ஜிகாதி குழுவை எதிர்த்து போராடும் ஈராக் படைகளுக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படைகள் அல் அசாத் விமானத் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.