அமெரிக்காவில் 30 மில்லியன் மக்கள் பணி இழப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்துவரும் நிலையில் அங்கு 30 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரமும் 4.8 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற மிகப்பெரும் வீழ்ச்சி இது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் 3.8 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக இன்று (30) அறிவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற மிகப்பெரும் வீழ்ச்சியாக இது கருதப்படுகின்றது.