அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமையைப் பாதிக்காது; தூதுவர் ரெப்லிட்ஸ்

அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்-

“அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் எவையும் இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவையல்ல. மேலும், பரஸ்பரம் இறைமையை மதித்து பாதுகாப்பதே வலுவான ஒத்துழைப்பு.

துரதிஷ்டவசமாக எங்களின் பல திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து அண்மைக் காலங்களில் பிழையான கருத்து காணப்படுகின்றது. ஆனால், எங்களின் எந்தத் திட்டங்களும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல.

இலங்கைக்கான திட்டங்களை உருவாக்குவது நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றோம்” என்றார்.