அமெரிக்காவின் ஒப்பந்தம் மகிந்தா கையில் – கோத்தா மீதான வழக்கு அமெரிக்காவிடம்

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவை தனது வழிக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க அவர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்து நடத்திவரும் நிலையில் சிறீலங்காவில் அமெரிக்கா மேற்கொண்ட உடன்பாட்டிற்கு மகிந்த கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் இரு தரப்பையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் என்ற இந்த உடன்படிக்கையானது சிறீலங்காவின் சட்டங்களுக்கு உட்படாது அமெரிக்க படையினர் தன்னிச்சையாக சிறீலங்காவில் கால்பதிக்க வழிவகுக்கும் என்பது மகிந்தாவின் கருத்து.

ஆனால் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் தனது உடபாட்டை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முனைந்து நிற்கின்றது. ஏனெனில் அவ்வாறு ஓன்று ஏற்பட்டால் கோத்தபாயா அரச தலைவர் ஆனாலும் அமெரிக்காவால் அவரைக் கட்டுப்படுத்த முடியும்.

எனவே தான் கடந்த வாரம் 480 மில்லியன் டொலர் நிதியையும் அது சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது.

USS Srilanka Dec 2018 அமெரிக்காவின் ஒப்பந்தம் மகிந்தா கையில் - கோத்தா மீதான வழக்கு அமெரிக்காவிடம்ஆனால் கொழும்பு துறைமுக நகர அபவிருத்தி திட்டத்தில் சீனாவுக்கு சிறீலங்கா காண்பிக்கும் மென்போக்கு கொள்கையானது அமெரிக்கா விடயத்தில் காணப்படவில்லை. ரணில் அரசு அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்பட்டாலும், மகிந்தா ராஜபக்சா தரப்பு அதற்கு கடுமையான எதிர்ப்பைக் காண்பிப்பதுடன், ஏனைய சிங்களக் கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது பூகோள அரசியலில் அமெரிக்காவுக்கு மிகுந்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. ஆனாலும் மேற்குலகம் தனது முயற்சியை கைவிடவில்லை, அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடாக சிறீலங்கா அரசுக்கு வழங்கப்படும் ஆறாவது கட்ட நிதியை கடந்த வாரம் அது வழங்கியுள்ளது.

164 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த நிதியின் வழங்கலும், 480 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் நிதியின் வழங்கலும் தேர்தல் காலத்தில் இடம்பெற்றுள்ளதானது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

தேர்தல் மோசடிகளுக்கு ரணில் அரசு நிதியை பயன்படுத்தினால் அதனை ஈடு செய்வதற்கு ஏதுவாக இந்த நிதி வழங்கப்படுகின்றதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மாலைதீவில் தனது ஆதிக்கத்தை கொண்டுவருவதற்காக மலைதீவானது சீனாவிடம் பெற்ற ஏறத்தாள பத்தாயிரம் கோடி ரூபாய் கடன்களை அடைத்து அங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இந்தியாவின் உத்தியை மேற்குலகம் கையில் எடுக்கப்போகின்றதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கோத்தபாயாவின் வழக்கை மட்டும் நடத்துவதன் மூலம் சிறீலங்கா அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதனை அமெரிக்காவும் நன்கு அறியும். 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை முறியடிக்க ஜே.வி.பி சிங்கள மக்களை அணிதிரட்டியது போல அமெரிக்காவிற்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்டும் வல்லமை மகிந்தா தரப்புக்கு உண்டு.

ஏனெனில் தென்னிலங்கையின் இரு பெரும் கட்சிகளும் ஏறத்தாள அரைப் பங்கு வாக்குப் பலத்தை தென்னிலங்கையில் கொண்டுள்ளன.

அதாவது சாதாரண அழுத்தங்களை கொண்டு சிறீலங்கா அரசை மிரட்டும் மேற்குலகத்தின் திட்டம் எதிர்வரும் காலங்களில் அதிக பலனைக்கொடுக்காது என்றே நம்பப்படுகின்றது.

எனவே அதற்கும் அப்பால் சென்று இனப்படுகொலை என்ற அஸ்த்திரத்தை கையிலெடுக்க வேண்டிய கட்டயத்திற்குள் மேற்குலகம் தள்ளப்படும். அதனைத் தான் அவர்கள் யூகோஸ்லாவாக்கியாவில் செய்தனர்.