அமெரிக்காவின் உடன்பாட்டுக்கு எதிராக சாகும்வரை உண்ணா நிலை போராட்டத்தில் இறங்கினார் பௌத்த துறவி

சிறீலங்காவில் கால்பதிக்கும் அமெரிக்காவின் திட்டம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்ற நிலையில் அதற்கு மேலும் நெருக்கடிகள் ஏற்படும் விதமாக சாம்வரை உண்ணா நிலை போராட்டம் ஒன்றை உடுடும்பர காசியபா தேரர் நேற்று (5) ஆரம்பித்துள்ளார்.

சிறீலங்காவின் தற்போதைய அரசு அமெரிக்காவின் இந்த உடன்பாட்டில் அவசரமாக கையெப்பமிட்டு நிதியை பெற்றுக்கொள்வதுடன், அரச தலைவர் தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் அதனை நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளதானது சிறீலங்காவுக்கு ஆபத்தானது என கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தேரர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் உடன்பாட்டுக்கு எதிராக சிறீலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் உடன்பாட்டில் கையொப்பமிட்டு 400 மில்லியன் டொலர்களை பெறும் உரிமை நிதி அமைச்சுக்கு இல்லை என வழக்கை தாக்கல் செய்துள்ள சிறீலங்கா சட்டவாளர் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உடன்பாடு நிலம் மற்றும் நீதித்துறையை உள்ளடக்கியதாக உள்ளது. எனவே அதில் கையொப்பமிடும் அதிகாரம் நிதி அமைச்சுக்கு கிடையாது என அது மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உடன்பாடு தொடர்பான இலக்கு இணையத்தின் ஆய்வுச் செய்தியை வாசிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

அமெரிக்காவின் ஒப்பந்தம் மகிந்தா கையில் – கோத்தா மீதான வழக்கு அமெரிக்காவிடம்