அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்துக – ஐ.நாவுக்கான அறிக்கையில் கோரிக்கை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியவும் அவர்களுக்கான நீதியை வேண்டியும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  யாழ்.  பேருந்து நிலையமுன்றலில் ஆரம்பித்த  போராட்டம் பேரணியாக யாழ் மாவட்டச்செயலகம் வரை சென்றது.

அங்கு ஐ.நா வுக்கான மகஜரை அருட்தந்தைகளான லியோ ஆம்ஸ்ரோங், ரெக்ஸ் சவுந்தரா, அருட்சகோதரி அன்ரனிற்றா ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள், கையளித்தனர். இந்த போராட்டத்தில் சர்வமத்த்தினர், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.Dis 2020 08 30 11 12 33 அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்காவை நிறுத்துக - ஐ.நாவுக்கான அறிக்கையில் கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற இந்த இனஅழிப்பு விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றில் கையாள்வதற்கு ஏதுவாக உரியை வேண்டுகோளுடன் பொருத்தமான இடத்தில் இதனை பாரப்படுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை பார்வையிட கீழ்க்காணும் இணைப்பை அழுத்தவும்.

அறிக்கை