காணாமல்போனவர்களின் தகவல்களை சேகரித்தவர்கள் கூட சிறீலங்காவில் துன்புறுத்தப்பட்டனர் – ஜஸ்மின் சூக்கா

காணாமல்போனவர்களின் பெயர்களை சேகரித்தவர்கள் கூட பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்ப்ட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாள 15 பேருக்கு 2015 ஆம் ஆண்டு பிரித்தானியா அகதித் தஞ்சம் வழங்கியுள்ளது எனவும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு இன்று (30) அனைத்துலக காணாமல்போனவர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்தபோதும், போரில் காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் உண்மையை தேடிய தமிழ் இளைஞர்கள் மிக்பெரும் விலையை கொடுத்துள்ளனர்.

தமக்கான நீதியை கேட்டும் செயல்முறையில் இந்த குடும்பங்கள் பல தடவைகள் பலியாக்கப்பட்டுள்ளார்கள். உண்மையை கண்டறிவதில் அக்கறை எதுவும் கொண்டிராத ஒரு அரசாங்கமே இதற்கான முழுப் பொறுப்பையும் கொண்டுள்ளது.

எமது இணையத்தளத்தில் 2009 ஆம் ஆண்டு மே 18 அல்லது அதற்கு அண்மையான நாட்களில் அரச பாதுகாப்பில் இருந்து காணாமல்போனதாக கூறப்படும் 340 தமிழர்களின் பெயர்கள் மற்றும் படங்கள் அடங்கிய ஒரு ஆவணம் உள்ளது. இலங்கை இராணுவத்திடம் அவர்கள் சரணடைவதைக் கண்ட பல சாட்சிகள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முழுமையான அறிக்கையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

அறிக்கை