‘அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்’-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு

15 காவல்துறை பிரிவுகளில் 05 நீதிமன்றங்களால் பலருக்கு எதிராக 15க்கும் மேற்பட்ட தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் தடைகளை தாண்டி உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

4 1 'அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்'-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு

இந்நிலையில், சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியதாக இன்று 2021.02.03ஆம் திகதி தொடக்கம்  2021-02-06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர்.

IMG 0122 'அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்'-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு

“நாட்டில் சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு எதிராக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு எமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைவே சிறுபான்மை இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளை எதிர்கொள்ள உறுதுணையாக அமையும்.

IMG 0210 'அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்'-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு

குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, உரிமை மறுப்பு போன்ற சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இம்மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் சகோதர உறவுகளாக ‘மக்கள்’ என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்.

IMG 0112 'அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்'-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபான்மை (தமிழ் – முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

1 25 'அநீதிக்கு எதிராக தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்'-யாழ்.முஸ்லிம் மக்கள் அழைப்பு

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், இம் மாபெரும் பேரணியையும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றும், இந் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை கண்டித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் கட்டாய ஜனாஸா எரிப்பை கண்டித்தும் தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தியும் அம்பாறை பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி தற்போது தாழங்குடா மட்டக்களப்பு வரை வந்துள்ளது. நாளை காலை 8மணிக்கு அங்கிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரம் வாழைச்சேனை வாகரை, மூதூர் வழியாக திருமலையை வந்தடைந்து அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளது.