அணுக்கழிவு நீரை கடலில் கொட்டும் ஜப்பான் – நீதிமன்றத்தை நாடும் தென்கொரியா

புக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து,அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கொரியா சார்பில் பன்னாட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பானுக்கு சர்வதேச அணு சக்தி முகமை (IAEA) ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜப்பானில் தற்போது பயன்பாட்டில் இல்லாத  புகுஷிமா அணு உலையின் அணுக்கழிவுகளை சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு மீனவர்கள், சூழலியலாளர்கள் மற்றும் அயல்நாடுகள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தன.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரியா அரசு சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் மூன் ஜே அறிவித்துள்ளார்.

கடந்த 2011, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தின் காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டது. இந்த மூன்று பேரிடர்களாலும் கிட்டத்தட்ட 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு அந்த அணுமின் நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.