ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் உள்ள புன்யோல் என்ற நகரத்தில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளிப்பழத்தை எறிந்து விளையாடும் நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக கடந்த புதன்கிழமை (31) இடம்பெற்றது.
1945 ஆம் ஆண்டு தக்காளி உற்பத்தி செய்யப்படும் பிரதேசத்தில் உள்ளூர் சிறுவர்கள் உணவுக்காக மேற்கொண்ட சண்டையை நினைவுகூரும் முகமாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. 1980 களில் இது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பின்னர் அது அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகம் எங்கும் இருந்து 20,000 மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். கோவிட் நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்கள் இடம்பெறாது இருந்த விழா இந்த வருடம் இடம்பெற்றது பெருமளவான மக்களை கவர்ந்துள்ளது.
இந்த விழாவில் 130 தொன் எடை கொண்ட தக்காளிப்பழங்கள் பயன்படுத்தப்பட்டன. நகரின் வீதிகள் தக்காளி பழங்களினால் நிறைந்து சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது. விழாவில் கலந்துகொள்வதற்காக ஒருவரிடம் இருந்து 12 ஈரோக்கள் அறவிடப்பட்டுள்ளது.