வேலூர் சிறையில் 12 நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன்

490 Views

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.  4ஆம் திகதி அவர் சோர்வடைந்ததையடுத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

சிறை விதிகளை மீறி வெளிநாட்டிலுள்ள ஒருவரிடம் முருகன் வீடியோ அழைப்பில் பேசினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

உண்ணாவிரதத்தினால் சோர்வடைந்த முருகனுக்கு 04ஆம் திகதி குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும், வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply