விவசாய நிலம் அபகரிப்பு -மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு கலநல அமைப்பு விவசாயிகள் வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் மூதாதையர் தொட்டு இன்று வரை வேளாண்மை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்றும் சிறுபோக விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் குறித்த விவசாய காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றினால் சோளார் (solar) செய்கைக்காக 352 ஏக்கர் விவசாய நிலத்தினை கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தின்போது விவசாயிகள் ‘எங்கள் வயல் காணிகளை அபகரிக்காதே, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர், பல ஆண்டுகள் செய்து வந்த காணிகள் எங்களுக்கே உரியது, சோளர் பவர் எமக்கு வேண்டாம்’ போன்ற வாசகங்களை எழுதிய அட்டையை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply