விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் – 500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த பாரம்பரியத்துக்கு புத்துயிர்

மெக்ஸிக்கோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில் வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துப்போன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.

உலமா என்றழைக்கப்படும் இந்த பந்து விளையாட்டானது, மெசோஅமெரிக்காவில் ஸ்பானிஷ் காலனியாதிக்க படையினர் வந்த 1519ஆம் ஆண்டுக்கு முன்பே ஐந்து நூற்றாண்டுகளாக விளையாடப்பட்ட ஒரு பாரம்பரிய விளையாட்டு.

மத்திய மெக்சிகோவில் தொடங்கி, தெற்கே கௌதமாலா, எல் சால்வடார், நிகராகுவா, ஹாண்ட்யூரஸ், கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பழங்காலப் பரப்பு மெசோ அமெரிக்கா எனப்பட்டது.108660981 14cf42ba 4d01 44a0 a5da f7ff514d971a விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் - 500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த பாரம்பரியத்துக்கு புத்துயிர்

உலமாவுக்கென பிரத்யேக பட்டைகள் மற்றும் அரைக் கச்சைகளை அணிந்திருக்கும் வீரர்கள் தங்களது இடுப்பு பகுதியினை பயன்படுத்தி சுமார் நான்கு கிலோ எடை கொண்ட ரப்பர் பந்தை அடிக்கின்றனர்.

இதே விளையாட்டு சில சமயங்களில், கூடை பந்தாட்டத்தை போன்று, ஒரு குறிப்பிட்ட கல் முற்றத்திலான வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வைத்து விளையாடப்படுவதுண்டு.

மெக்ஸிகோவில் பூர்வகுடி மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உலமாவுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகள் முதலில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் தலைநகரில் சமீபத்தில்தான் உலமாவுக்கான பிரத்யேக ஆடுகளம் அமைக்கப்பட்டது.

அந்த புதிய ஆடுகளத்தில் பயிற்சியாளராக இருக்கும் இம்மானுவேல் ககலோட்ல், “இடைப்பட்ட காலத்தில் இந்த விளையாட்டு மறக்கப்பட்டுவிட்டது” என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

“ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்த இந்த விளையாட்டு தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது,” என்று அவர் கூறுகிறார்.

இந்த புதிய ஆடுகளத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் தங்களது பாரம்பரிய விளையாட்டை கற்று வருகின்றனர்.108660977 2e470c91 ce73 4a73 aea0 fcef3057204a விளையாட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் - 500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த பாரம்பரியத்துக்கு புத்துயிர்

“நாங்கள் எங்களை பெண் போர் வீரர்கள் போன்று நினைத்துக்கொள்கிறோம். இந்த விளையாட்டு எளிதான ஒன்றல்ல. அனைவராலும் இதை விளையாடிவிட முடியாது. உடல் ஒத்துழைப்பு மட்டுமின்றி, அதிகளவிலான பயிற்சியும் இதற்கு அவசியம்,” என்று கூறுகிறார் 25 வயதான பீட்ரிஸ் காம்போஸ்.

போட்டி துவங்குவதற்கு முன்பு அவர் மணம் நிறைந்த மரப் பிசினை புகைக்கிறார்.

உலமா விளையாட்டு சடங்கு மற்றும் மதரீதியிலான தொடர்பை கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. தற்போதுகூட, பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு சில நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னரே, உலமா போட்டிகள் தொடங்குகின்றன.

அவை இறப்பின் கடவுளான மிக்ட்லாண்டெகுட்லி போன்ற பல்வேறு புராண தெய்வங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது.

மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் தற்போது பிரபலமடைய தொடங்கியிருக்கும் இந்த விளையாட்டை ஆதரிப்பவர்கள், தாங்கள் உலமாவை ‘மீட்டெடுத்தோம்’ என்று கூறுவதை விட, உலமா தங்களுக்கு புதிய பாதையை கொடுத்துள்ளதாக கூறுவதே சிறந்தது என்று தெரிவிக்கின்றனர்.

நன்றி- பிபிசி தமிழ்