விடுதலை செய்யுங்கள், அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் – தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்

திருச்சி மத்திய சிறையில், சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம் 6 நாட்களை கடந்து முன்னெடுக்கப்படுகின்றது.

தமக்கு எவ்விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை, தம்மை யாரும் கவனிப்பதும் இல்லை. தங்களை விடுவிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்தே தாம் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழ அகதி தெரிவித்தார்.

Leave a Reply