வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பூந்தோட்டம் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி. சு. கோணேஸ்வரலிங்கத்தின் தலைமயில் குறித்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வங்கியில் புதிய ஆடைகள் மற்றும் தம்வசம் உள்ள பாவனைக்கு மேலதிகமான நல்ல நிலையில் உள்ள ஆடைகளையும் பொது மக்கள் வைப்பு செய்து நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கு உதவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார்,உதவி பிரதேச்செயலாளர் ச.பிரியதர்சினி,தாதிய உத்தியோகத்தர்கள்,சிரேஸ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.