வவுனியாவிலும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை!!

ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோலிற்கான தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக எண்ணி யாழ் உள்ளிட்ட சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் இன்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை நிரப்பவருகின்றனர் .

குறித்த தகவல் வவுனியாவிலும் பரவியதையடுத்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

வவுனியாவில் இன்று மாலை வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் வழமை போல இருந்த நிலையில் மாலை 7மணிக்குபின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை நிரப்பியதை அவதானிக்க முடிந்தது.

பொதுமக்கள் திடீரென அதிகளவில் கொள்வனவு செய்தமையால், வவுனியாவின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
viber image 2020 01 09 08 18 26 வவுனியாவிலும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை!!

viber image 2020 01 09 08 19 21 வவுனியாவிலும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை!!

Leave a Reply