வன்முறைக்கு எதிராக மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

334 Views

மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறையை நிறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இன்று மெதடிஸ்த திருச்சபை புகலிடத்தின் ஏற்பாட்டில் இப் பேரணி இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் நோக்கிலும், குடும்பத்தில் இடம்பெறும் பிணக்குகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலும் குறித்த விழிப்புணர்வு பேரணியும், வீதி நாடகமும் நடைபெற்றுள்ளது.

இதில் புகலிடத்தின் திட்ட உத்தியோகத்தர் ரஜனி செல்லையா, சுயஉதவிக் குழு, கொத்தணி உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

dfgd வன்முறைக்கு எதிராக மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply