வடகொரிய அதிபர் கிம் இன் சகோதரி காணாமல் போயுள்ளார்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் குறித்து பல செய்திகள் பரவி வரும் நிலையில் தற்போது அவரின் சகோதரி கிம் யோங் உன் திடீரென காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகவும், தற்போது அவரின் சகோதரியே அவரின் பொறுப்புக்களை ஏற்றிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.

ஆனால் இதை பொய்யாக்கும் விதமாக அதிபர் கிம் இன் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி கிம் ஜோங் தனது சகோதரியிடம் தனகு அதிகாரத்தைப் பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன் அடுத்த அதிபராக வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த போது, தற்போது அவர் மாயமாகியுள்ளார்.

2013இல் அதிபர் கிம்மிற்கு  நம்பிக்கைத் துரோகம் விளைவித்தார் என்ற காரணத்திற்காக தனது தாய்மாமனும், துணை அதிபருமான ஜங் சங் தக் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிம் இன் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த போதெல்லாம் அவரின் சகோதரியே நிர்வாகங்களை கவனித்து வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.