வங்கதேசம்: பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பலி

567 Views

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்துக்கு எதிராக, நேற்று நடந்த போராட்டங்களின் போது குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வங்கதேச விடுதலைப் போரின் 50-வது ஆண்டு விழா மற்றும் ‘வங்கதேசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர்  அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்கா, சிட்டகாங், பிரம்மன்பாரியா உள்ளிட்ட நகரங்களில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது.

இந்தப் போராட்டங்களை  அடக்க  காவல்துயைினர் எடுத்த நடவடிக்கையில் நான்கு பேர் காயமடைந்து பின் மருத்துவ மனைகளில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நரேந்திர மோடிக்கு எதிராக ஹிஃபாஸத் – இ- இஸ்லாம் எனும் அமைப்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்திய இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த அமைப்பு நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பிரதமர் மோடியின்   வருகையை வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகள் கடந்த சில நாட்களாகவே எதிர்த்து வருகின்றன  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply