லண்டனில் தாக்குதல்; மூவர் பலி பலர் காயம்

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று மாலை ஒரு பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்ட மக்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தீவிரவாதச் செயலோடு தொடர்புடையதா என்பது குறித்து பிரிட்டன் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.