லண்டனிலிருந்து இலங்கை வந்த யாழ். இளைஞா் மாத்தளையில் வைத்து அதிரடியாகக் கைது

9 1 லண்டனிலிருந்து இலங்கை வந்த யாழ். இளைஞா் மாத்தளையில் வைத்து அதிரடியாகக் கைதுபிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் மாத்தளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை அம்மன் கோயில் பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி இளைஞன் கைது செய்யப்பட் டுள்ளார். 33 வயதுடைய செல்வராசா மேன ன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞன் மைக்கல் நேசக்கரம் அமைப்பின் உறுப்பினர் என்பதுடன், அந்த அமைப்பின் ஊடாக முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பலருக்கும் பல்வேறு உதவித் திட்டங்களைச் செய்து வந்துள்ளார்.

கடந்த மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த மேற்படி இளைஞன் வெடுக்குநாறிமலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது மாத்தனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த மாத்தளைப் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.