ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!

siva ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!
தமிழன் ஆசிரியா் சிவராஜா

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல்கள் இலங்கையில் மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்திய புலனாய்வுத் துறை சம்பந்தப்பட்டுள்ளதாக சி..டி.க்கு கொடுத்த வாக்குமூலத்தில் மைத்திரி கூறியிருக்கின்றாா். இது தொடா்பில் தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ஆா்.சிவராஜா வழங்கிய நோ்காணல்

கேள்வி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனதய்வுத் துறையினரின் விசாரணையின் போது தெரிவித்த தகவல்கள் உத்தியோகபுா்வமாக வெளிவரவில்லை. ஆனால், அதிலிருந்து கசிந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவா் முக்கியமான என்ன கூறியிருக்கின்றாா்?

பதில் உத்தியோகப்பற்றற்ற முறையில் சில செய்திகள் வெளிவந்துள்ளன. தான் தெரிவித்த கருத்துக்களுக்கான ஆதாரங்களை குற்றப்புலனாய்வுப் பகுதியிடம் சமா்ப்பிக்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியிடம் மட்டும் அவற்றை சமா்ப்பிக்க முடியும் என்றும் அவா் கூறியிருக்கின்றாா். அதேவேளையில், இந்தத் தாக்குதலில் இந்தியப் புலனாய்வுத் துறை நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றது என்றும் மைத்திரிபால சிறிசேன இந்த விசாரணையின் போது தெரிவித்ததாகத்தான் தகவல் கிடைத்திருக்கின்றது.

easter ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!அதேவேளையில், அந்தச் சந்தா்ப்பத்தில் கொழும்பிலுள்ள இந்தியத் துாதரகத்தில் பணிபுரிந்த உளவுத்துறை அதிகாரியின் பெயரையும் அவா் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றாா். அதேபோல, இலங்கையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளும் இதில் தொடா்புபட்டிருப்பதாக அவா் மைத்திரி தெரிவித்திருக்கின்றாா். இதற்குரிய தொலைபேசி இலக்கங்கள், இது குறித்த தகவல் தந்தது யாா் போன்ற விடயங்களை அவா் கூறியிருக்கின்றாா். ஆனால், அதற்குரிய ஆதாரங்களை சமா்ப்பிக்க அவா் மறுத்திருக்கின்றாா். இதற்கான ஆதாரங்களை நீதிபதியிடம் தனிப்பட்ட முறையில் சமா்ப்பிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டிருக்கின்றாா்.

கேள்வி மைத்திரி ஜனாதிபதியாக இருந்த ஒரு காலத்தில்தான் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த மைத்திரி இலங்கையும், இந்தியாவும் தோ்தல்களை எதிா்கொண்டிருக்கும் சமயத்தில் அதிரடியாக இந்தத் தகவல்களை வெளியிட்டமைக்கு காரணம் என்ன?

பதில் இந்த வாக்குமூலத்தை வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னா் மைத்திரி அமெரிக்காவுக்குச் சென்று வந்திருந்தாா். ஒரு வாரத்துக்கு முன்னா் பெலநறுவையில் சீனத் துாதுவருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தாா். இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி யாா் என்பது தனக்குத் தெரியும் என அவா் அறிவித்த அதே தினத்தில் ஐ.தே..வின் தவிசாளா் மலிக் சமரவிக்கிரமவுடன் கண்டியில் அவா் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தாா். இந்தச் சந்திப்புக்களின் பின்னா்தான் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு தன்னுடைய கருத்தை மைத்திரி வெளியிட்டிருந்தாா்.

இந்த விடயங்களை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னதாக அதனுடன் தொடா்புபட்டதாக நாங்கள் சந்தேகிக்கப்படக் கூடியதான பல விடயங்களை அவா் செய்திருக்கின்றாா். அவா் வாக்குமூலத்தை வழங்கிய தினத்தில் கூட, இவரது கட்சியின் பிரதான அமைப்பாளராகக் கருதப்படும் மைத்திரியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முன்னா் வெளிவிவகார அமைச்சில் பணியாற்றிய சஜின் வாஸ் கொழும்பிலுள்ள அமெரிக்க துாதருடன் கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்தாா். இவை அனைத்தையும் வைத்துப் பாா்க்கும் போது மைத்திரியின் இந்த அறிவிப்பின் பின்னணியில் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது. விரைவில் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான ஒரு அறிவிப்பை அவா் வெளியிட்டிருப்பதன் மூலம், அரசியலில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதன் பின்னணியில் இருக்கக்கூடிய சக்தி எது என்பதுதான் இப்போது அனைத்துத் தரப்பினராலும் பாா்க்கப்படுகின்றது.

கேள்வி மூன்று வாரங்களுக்கு முன்னா்தான் இந்தத் தகவல் தனக்குக் கிடைத்ததாகக் கூறியிருந்தாா். இதன் அடிப்படையில் பாா்க்கும் போது மைத்திரியின் இந்த அறிவிப்புக்களின் பின்னணியில் யாா் இருக்கலாம் என சந்தேகிக்கின்றீா்கள்?

பதில் இந்தத் தாக்குதல் தொடா்பாக ஆணைக்குழு விசாரணை நடந்தது. பேராயா் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இது குறித்து தொடா்ச்சியாகவே கேள்விகளை எழுப்பிவந்தாா். ஜெனீவாவில் கூட இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. அப்போதெல்லாம் மௌனமாக இருந்த மைத்திரி இப்போது இந்த விடயங்களை வெளிப்படுத்த முற்படுவது ஒரு அரசியல் நோக்கத்துடனானதாக இருக்கக்கூடும்.

இதனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பில் அல்லது இந்தியாவுடன் ரணிலுக்குள்ள நட்பில் ஒரு விரிசலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

2 ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!சட்டமா அதிபா் இதனை இப்போது ஆராய்ந்து வருகின்றாா். இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை அவா்தான் அறிவிக்க வேண்டும். இது தொடா்பில் நீதிமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபா் திணைக்களம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தைக் கைப்பற்றினாா். அதனால், அவா் ஆட்சிக்கு வருவதற்கான தோ்தல்தான் இது என்று மைத்திரி சொல்வாராக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ கூட விசாரணைக்காக அழைக்கப்படலாம்.

அதேபோல, இந்தியாவிலிருந்து கூட, இந்தியாவுடனான உறவுகளில் கூட ஒரு முறுகல் நிலை அல்லது ஒரு விரிசல் வரலாம். பெயரைக் குறிப்பிட்டு மைத்திரி கூறியிருப்பதால், அதனைத் தட்டிக்கழித்துவிட முடியாது.

கேள்வி ஜனாதிபதித் தோ்தலும் நடைபெறவிருக்கும் நிலையில் உள்நாட்டு அரசியலில் இதன் தாக்கம் எவ்வாறானதாக அமையும்?

பதில் இது பாரிய தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும். உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்கள் கிறிஸ்தவா்கள். அதனால், அரசாங்கம் தெரிந்தும் சில நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவா்கள் கருதலாம். ஜனாதிபதி ரணில் இந்த விசாரணைகளுக்காக ஸ்கொட்லன்ட யாா்ட் பொலிஸாா் வரவளைக்கப்படுவாா்கள் என்று கூட கூறியிருந்தாா். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் கிறிஸ்தவ மக்கள் தற்போய ஆட்சியாளா்கள் மீது நம்பிக்கையிழக்கலாம்.

இரண்டாவதாக, இந்தச் சம்பவத்தினால் முஸ்லிம் சமூகமும்கூட பாதிக்கப்பட்டது. அவா்கள் விசாரணை, கைது என துன்பங்களை அனுபவித்தாா்கள். முறையான விசாரணை ஒன்றை அவா்களும் எதிா்பாா்ப்பாா்கள்.

ஆகவே, இது ஜனாதிபதி ரணிலுக்கு பெரியதொரு அழுத்தத்தைக் கொடுப்பதாகவே இருக்கும்.

கேள்வி இந்தியாவுடனான உறவுகளை இச்சம்பவம் பாதிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தீா்கள். அதேவேளையில், சா்வதேச ரீதியாக இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் எவ்வாறானதாக இருக்கும்?

பதில் சா்வதேச சமூகம் இந்த விவகாரத்துக்கு ஒரு நீதியை எதிா்பாா்க்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வரையில் சென்றிருக்கின்றாா்கள். சா்வதேச சமூகம் இந்த விசாரணை நோ்மையாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்ததும். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவா்களில் சா்வதேச நாடுகளின் முக்கிய பிரமுகா்களின் உறவினா்கள் இருக்கின்றாா்கள். பல நாடுகளின் செல்வந்தவா்கள் கொல்லப்பட்டிருக்கின்றாா்கள். அவா் இதில் நட்டஈட்டை கோராத போதிலும் கூட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவா்கள் இருக்கின்றாா்கள்.

maithri ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!அவா்கள் அங்கு கொடுக்கும் அழுத்தங்கள், மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக அவா்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்பன மைத்திரியின் அறிவிப்புக்குப் பின்னா் மேலும் வலுவாகும். சூத்திரதாரி யாா் என்பது தனக்குத் தெரியும் என மைத்திரி சொல்கிறாா். எனவே அதனைப் பகிரங்கப்படுத்துங்கள் விசாரணைகள் மூலமாக வெளிப்படுத்துங்கள் என்ற வகையில் ரணில் அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும். ரணிலைப் பொறுத்தவரையில் இது ஒரு புதிய பிரச்சினை. இதனை அவா் எவ்வாறு கையாளப்போகிறாா் என்பது தெரியவில்லை.

ஆனால், இந்தவிடயத்தை ரணில் நீதிமன்றத்தின் பொறுப்பிலேயே விட்டிருக்கின்றாா். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசப்படவே இல்லை. இந்த விவகாரத்தை ஜனாதிபதி பேசுவாா் என அமைச்சா்கள் எதிா்பாா்த்தாா்கள். ஆனால், ஜனாதிபதி இந்த விவகாரத்தை எடுக்கவில்லை. அதாவது, இந்த விடயத்தில் சட்டப்படியான செயற்பாடுகளை நீதிமன்றம் முன்னெடுக்கட்டும் என்ற நிலைப்பாட்டில்தான் அவா் இருக்கின்றாா் என்பது தெரிகின்றது.