லடாக் எல்லையில் சீனப் படையினருடனான மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலி

சீன – இந்திய எல்லையான லடாக் பகுதியில் நிகழ்ந்த மோதலில் 20 இந்தியப் படையினர் பலியாகியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இம்மோதலில் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர், 2 வீரர்கள் உயிரிழந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. சீன படையினர் தரப்பிலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.