ரெஸ்லாவை பின்னுக்கு தள்ளிய மெர்ஸடீஸ் பென்ஸ்

உலகில் முன்னனி கார் என்ற இடத்தை ஜேர்மனின் மெர்ஸடீஸ் பென்ஸ் நிறுவனம் மீண்டும் தக்கவைத்துள்ளது. கடந்த வருடம் பென்ஸை அமெரிக்காவின் ரெஸ்லா நிறுவனம் பின்தள்ளியபோதும் இந்த வருடம் பென்ஸ் தனது இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.

இந்த வருடம் பென்ஸின் சந்தை பெறுமதி 60 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. ஆனால் ரெஸ்லாவின் சந்தைப் பெறுமதி கடந்த ஆண்டில் இரந்ததைவிட 12 விகிதம் வீழ்ச்சி கண்டு 58.3 பில்லியன் டொலர்களாக வீழச்சிகண்டுள்ளது.

எனினும் சீனாவின் மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு கடும் போட்டியாக வளர்ந்து வருவதாக பென்ஸின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான விற்பனை முகாமையாளர் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சீனாவின் கார் உற்பத்தி அதிகரித்து வருவதுடன் அதன் சந்தைப் பெறுமதி 20 விகிதங்கள் அதிகரித்து 12.1 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

இதனிடையே, ரெஸ்லா நிறுவனத்தின் தலைவர் இலோன் முஸ்க் தெரிவித்துவரும் கருத்துக்கள் அவரின் வர்த்தகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.