யாழ். பல்கலைக்கழகத்தில் ‘தமிழமுதம்’ விழா

தமிழரின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ‘தமிழமுதம்’ என்னும் விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா இரண்டாவது வருடமாக இம்முறையும் கொண்டாடப்படுகின்றது. இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்வுகள் நிகழ்கின்றது.

இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான நாட்டுக்கூத்து, வில்லிசை, பறை, கரகாட்டம் போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Jaffna Uni2 யாழ். பல்கலைக்கழகத்தில் ‘தமிழமுதம்’ விழா
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குகொள்கின்றனர். காலை 8.30இற்கு ஆரம்பமான இந்நிகழ்வு இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது.