மூடப்பட்டுள்ள விமான நிலையங்களை விரைவில் மீளத் திறப்பது குறித்து அரசு பரசீலனை

170 Views

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் மூடப்பட்ட விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் பெருமளவில் நாடு திரும்பிக்கொண்டு இருக்கின்றார்கள். உலகளவில் ஏனைய நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போது நாடு திரும்பும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இதனால் அடுத்த மாதத்திற்குள் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதில் இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதாலும், இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணி முடிவடைந்த நிலையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply